காவல் நிலையத்தை வைத்து கெத்தாக டிக்டாக்.. மாட்டிக்கொண்ட இளைஞர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலையம் முன்பு நடந்து வந்தபடி கானா பாடலை பாடியபடி வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார். நிரம்பூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திரவர்மா என்று அந்த இளைஞன் கைன் மாஸ்டர் என்ற செயலி மூலம் உருவாக்கியுள்ள வீடியோவில் இருபுறமும் கையில் அரிவாளுடன் நிற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

 

இணையத்தில் இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் காவல்துறை குறித்து அவதூறு பரப்பியதாக வழக்குபதிவு செய்து மகேந்திரவர்மன் கைது செய்துள்ள போலீசார் அவர் கூட்டாளிகளான பிரபாகரன் ஸ்டீபன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

மகாராஷ்டிராவில் ஊரடங்கு மீறியவர்கள் 4 மணிநேரம் சாலையில் அமர வைத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினார். அதிகம் பரவி வரும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றிய சுமார் 200 பேரை பிடித்து சாலை அமரவைத்து மகாராஷ்டிர மாநில காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர். இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வந்த பொதுமக்களை பிடித்த காவல்துறையினர் சாலையில் 4 மணி நேரம் அவர்களை அமர வைத்து தண்டனை வழங்கியுள்ளனர்.


Leave a Reply