உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் ஜோதி விழிப்புணர்வு பிரச்சாரம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஜோதி மகாராஷ்டிர மாநிலத்தில் போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாக்பூரைச் சேர்ந்த ஜோதி சுமார் 2 அடி மற்றும் உயரம் கொண்டவராவார். இதனால் அவரை உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்ணாக கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் நாக்பூரில் போலீசாருடன் இணைந்து ஜீப்பில் சென்று ஒவ்வொரு பகுதியாக சென்று கொரொனா குறித்தும் வீட்டை விட்டு மக்கள் வெளியே வராமல் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பிரச்சாரம் செய்தார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வீட்டின் வழி மறந்து சாலையில் தவித்த மூதாட்டியை சுமந்துகொண்டு வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஹைதராபாத் தேக்கம்பட்டியில் மூதாட்டி ஒருவர் கேட்பாரின்றி கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் வீட்டின் வழி மறந்து சாலையில் அமர்ந்து இருந்த மூதாட்டியை கண்டனர், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். மூதாட்டியை சுமந்துகொண்டு வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றனர்.


Leave a Reply