சென்னையில் இரு சக்கர வாகனத்தை திருடியவர் கொலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் இரு சக்கர வாகனத்தை திருடியவரை கொலை செய்த நான்கு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கேகே நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தை கடந்த பிப்ரவரி மாதம் திருடிய அந்த வாகனத்துடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

ராமச்சந்திரன் கல்லூரி நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து ஆகாஷ் விசாரித்தபோது அது தன் நண்பனின் வாகனம் என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆகாஷ் அழைத்து செல்வதாக கூறி கேகே நகரில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்து வந்து தனது நண்பர்களுடன் இணைந்து கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இதுகுறித்து விசாரித்த கேகே நகர் போலீசார் ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர்.


Leave a Reply