கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய டால்பின்

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிய டால்பின் மீன் ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது. மணியன் தீவிலுள்ள முனைக்காடு பகுதி கடற்கரையில் டால்ஃபின் ஒன்று கரை ஒதுங்கி தண்ணீர் குறைந்த சேற்றுப் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தது.

 

அப்போது வேதாரன்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2 பேர் அவ்வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். உயிருக்கு போராடிய அந்த டால்ஃபினை கண்ட காவல் அதனை மீட்டு மீண்டும் ஆழமான கடற்பரப்புக்குள் விட்டார்.


Leave a Reply