தலைநகரில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

நாட்டின் தலைநகரை தன்னகத்தே கொண்டிருக்கும் டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக மும்முனை போட்டியை ஏற்படுத்தியிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

 

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நாளை நடைபெறும் தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் வரும் 11ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

 

நேற்று மாலையுடன் முடிவடைந்த இறுதிகட்ட பதிப்புரையில் பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸில் ராகுல் காந்தி, ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


Leave a Reply