திருவாடானையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு, ரொக்கம் வழங்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே தோட்டாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

 

இந்த பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் திருவாடானை தாசில்தார் சேகர், தோட்டாமங்கலம் தொடக்க வேளாண்மை சங்கத தலைவர் வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர்கள் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த பொங்கல் பரிசுபொருட்களையும், ரொக்கம் ரூபாய் ஆயிரத்தையும் தோட்டாமங்கலம் பகுதி மக்களுக்கு வழங்கினார்கள்.

 

இனி அடுத்தடுத்து அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆவலுடன் வாங்கி சென்றனர். இந்த விழாவில் தோட்டாமங்கலம் தொடக்க வேளாண்மை சங்கச் செயலாளர் முருகன் மற்றும் அலுவலர்கள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.


Leave a Reply