வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து விழுந்து பெண் குழந்தை பலி
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிஎன் பாளையத்தை சேர்ந்த இளவயதன் என்பவர் திருமண மண்டபங்களில் மேடை அலங்கார வேலை செய்து வருகிறார்.
இதற்கு தேவையான அலங்காரப் பொருட்கள் வீட்டின் அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இளவயதனின் இரண்டரை வயது இளைய மகள் தன்யா விளையாடிக்கொண்டே ஒரு பொருளை எடுக்க முயன்றுள்ளார். அப்போது பொருட்கள் சரிந்து மேலே விழுந்ததில் படுகாயம் அடைந்த தன்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




