தலைகீழாக சரிந்தது தங்கம் விலை..!
செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே நகை பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக தங்கம் விலை மாலையில் அதிரடியாக குறைந்தது. நேற்று காலையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை மாலையில் அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 சரிந்து ஒரு கிராம் ரூ.14,175க்கும் சவரனுக்கு ரூ.1,680 சரிந்து ஒரு சவரன் ரூ.1,13,400க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 சரிந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.225 சரிந்து ஒரு கிராம் ரூ.11,720க்கும் சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.93,760க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




