ஜன.11 சந்திர கிரகணம்! புவியின் நிழல் 90% சந்திரனை மறைக்கும்!

சனிக்கிழமை இரவு தொடங்கவுள்ள சந்திரகிரகணத்தை புவியின் நிழல் 90% சந்திரனை மறைத்திருக்கும் என கொடைக்கானல் வானியற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன் வரும் சனிக்கிழமை இரவு 10 மணி 37 நிமிடத்திற்கு துவங்கி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி 42 நிமிடம் வரை சந்திர கிரகணம் நிகழும் என்றார்.

 

மேலும் சந்திர கிரகணம் 40 நிமிடங்கள் உச்சத்தில் இருக்கும் எனவும், அதனை வானம் தெளிவாக உள்ள இடங்களில் பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply