சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து மது அருந்திய பன்றிகள்

ரஷ்யா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மதுபாட்டில்களை கீழே தள்ளி உடைத்து தரையில் சிந்திய மதுவை பன்றிகள் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சைபீரியா பிராந்தியத்தின் டியூமன் நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நுழைந்த தாய் பற்றி ஒன்றும், அதன் குட்டிகளும் அங்கிருந்து அலமாரிகளில் ஒவ்வொன்றாக மோப்பம் பிடித்துக்கொண்டே உள்ளே சென்றது. பின்னர் மதுபாட்டில்கள் இருந்த இடத்தை கண்ட பின் அதில் இருந்த இரண்டு மதுபாட்டில்களை தாய் பன்றி தனது மூக்கால் தள்ளிவிட்டு உடைத்தது.

 

பின்னர் தரையில் சிந்திய மதுவை 3 பன்றிகளும் சேர்ந்து குடிக்கத் தொடங்கின. இந்த காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து பன்றிகளை வெளியேற்றிய ஊழியர்கள் அதன் உரிமையாளர்களிடம் மதுவுக்காக பணத்தை வசூல் செய்தனர்.


Leave a Reply