நாளை முதல் பொங்கல் பரிசு விநியோகம்

ரேஷன் கடைகளில் நாளை முதல் பொங்கல் பரிசு வழங்க உள்ளதால் கூட்ட நெரிசலை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசு பொருட்கள் உடன் தொக்க தொகை 1,000 ரூபாய் வழங்கப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

 

இதன்படி நாளை முதல் அனைத்து நியாயவிலை கடை களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அனைவரும் சிரமமின்றி பொங்கல் பரிசு தொகை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கூட்ட நெரிசலின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு வழங்க போலீசாரிடம் உணவுத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply