9 ம் தேதி வழங்க வேண்டிய பொங்கல் பரிசு பொருட்களை 10 ம் தேதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ள நோட்டீசுகளை கிழித்ததால் பரபரப்பு

திருப்பூர் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவது குறித்து ஒட்டப்பட்ட நோட்டீசுகளை திருப்பூர் வடக்கு ரேசன் குடியுரிமை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஒவ்வொரு ரேசன் கடையாக சென்று ஆய்வு செய்து 9 ம் தேதி வழங்க வேண்டிய பொங்கல் பரிசு பொருட்களை 10 ம் தேதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ள நோட்டீசுகளை கிழித்ததால் பரபரப்பு!!

 

திருப்பூர் வடக்கு அங்கேரிபாளையம் பாளையம் பகுதியிலுள்ள செட்டிபாளையம் சொசைட்டிக்கு உட்பட்ட ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் எம் எல் ஏ ஊரில் இல்லாததால் பொங்கல் பரிசு 10 ம் தேதி வழங்கப்படும் என்று தகவல் பலகையில் எழுதி வைத்தனர்.

 

இது குறித்து உடனடியாக தொமுச சார்பில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது அதன் எதிரொலியாக உடனடியாக வடக்கு பகுதியிலுள்ள ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவது குறித்து ஒட்டப்பட்ட நோட்டீசுகளை கிழித்து எடுத்து சென்றுள்ளனர். இதனால் போயம்பாளையம் பகுதியில் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


Leave a Reply