பட்டதாரி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம்பறிப்பு : இளம்பெண் கைது

சேலத்தில் விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் களனி கோட்டையை சேர்ந்த டிம்பில்சியா என்பவர் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சேலத்தை சேர்ந்த லோகேஸ்வரனிடம் 50 லட்ச ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

 

இதேபோல் யோகேஸ்வரனின் நண்பர்களான குணா பிரவீன் இருவரிடமும் தலா 50 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். வாக்களித்தபடி வேலை வாங்கித் தராததால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் டிம்பில்சியாவை மடக்கிப் பிடித்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் டிம்பில்சியாவிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply