சரவணா ஸ்டோர் எஸ்கலேட்டரில் சிறுவனின் தலை சிக்கியது

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் எஸ்கலேட்டரில் 13 வயது சிறுவனின் தலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கனியா புரத்தை சேர்ந்த சசிகலா என்பவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணி எடுப்பதற்காக நேற்று மாலை தனது மகன் ரணீஷ் பாபுவுடன் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோருக்கு சென்றார்.

 

தனது மகன் ரணீஷ்பாபு உடன் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோருக்கு சென்றனர். கடையில் எட்டாவது மாடிக்கு இருவரும் எஸ்கலேட்டரில் சென்ற நிலையில் சிறுவன் ரமேஷ் பாபு எஸ்கலேட்டரில் நகரும் கைப்பிடி மீது தலையைச் சாய்த்தவாறு கீழ் தளத்தை வேடிக்கை பார்த்தவாறே சென்றதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இரண்டாவது தளத்தில் சென்று சேரும் இடத்திலுள்ள நிலையான சுவருக்கும் எஸ்கலேட்டருக்கும் இடையே உள்ள சிறு இடைவெளியில் சிறுவனின் தலை சிக்கி கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் எஸ்கலேட்டரில் மின்னிணைப்பு நிறுத்தி உடனடியாக சிறுவனை மீட்டனர்.

 

எனினும் ரமேஷ் பாபுவின் தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து சசிகலா தனது மகனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இது தொடர்பாக சசிகலாவின் புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Leave a Reply