நடிகர் யோகி பாபுவிடம் கால்ஷீட் வாங்கித் தருவதாகக் கூறி தயாரிப்பாளரிடம் 10 லட்சம் சுருட்டிய நபர்

நடிகர் யோகிபாபு விடம் கால்ஷீட் வாங்கித் தருவதாக கூறி தயாரிப்பாளரிடம் 10 லட்சம் ரூபாய் சுருட்டிய நபர் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த தயாரிப்பாளர் போஸின் அலுவலகம் வடபழனி என்ஜிஓ காலனியில் உள்ளது. இவரது நிறுவனம் ரவி சங்கர் இயக்கத்தில் அலிபாபாவும் 40 குழந்தைகளும் படத்தை தயாரித்து வருகிறது.

 

இந்த படத்தில் யோகிபாபுவை நடிக்க வைக்க கால்ஷீட் வாங்கி தருவதாக போஸின் நண்பர் அண்ணாதுரை 10 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்று உள்ளார். ஆனால் யோகிபாபுவின் கால்ஷீட் பெற்று தராத அண்ணாதுரை பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து போஸ் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் அண்ணாதுரை மீது புகார் அளித்துள்ளார்.


Leave a Reply