ராமநாதபுரம்: மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு…?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்பதாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

மொத்தமுள்ள 59 ஆயிரத்து 209 வாக்காளர்களில் 35 ஆயிரத்து 532 பேர் வாக்களித்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் அரசு இணையதளத்தில் 26 ஆயிரத்து 884 வாக்குகள் மட்டுமே பதிவானதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வெளிப்படைத் தன்மையோடு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்திரியிடம் கேட்ட போது அனைத்து ஆவணங்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக பதில் தெரிவித்தார்.


Leave a Reply