பட்டய கிளப்பிய பட்டாஸ் டிரெய்லர்! சில் ப்ரோ!

துரை செந்தில், தனுஷ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள படம் பட்டாஸ். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் தொடங்கும்போதே நமக்கு எது நல்லது என்பது நம்ம மண்ணுக்கு தான் தெரியும் என்று ட்ரெய்லர் தொடங்குகிறது.

 

தமிழரின் பாரம்பரிய கலையான அடிமுறை தற்காப்பு கலையை மையப்படுத்தி தான் படத்தின் கதை இருக்கும் என்பது டிரைலரை பார்க்கும்போது அறியமுடிகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன் சினேகா , நாசர் ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அப்பா தனுஷை கொன்றவர்களை மகன் தனுஷ் எப்படி பழி வாங்குகிறார் எனும் கமர்சியல் ஃபார்மேட் டிரைலராக இருந்தாலும் அந்த கதைக்குள் தனுஷ் என்கிற வால்யூ நிச்சயமாக ரசிகர்களை தியேட்டரில் வரவழைக்கும் என்று நம்பலாம். அப்பா மகன் என்கிற இரு கதாபாத்திரங்களில், வழக்கம்போல தனுஷ் இரண்டு கேரக்டர்களிலும் தனது நடிப்பை கனகச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

 

குறிப்பாக ஹீரோயினுக்கும் தனுஷுக்கும் இடையே யான விஷயங்களும் சினேகா தனுஷ் இடையேயான விஷயங்களும் ரசிக்கும்படியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.


Leave a Reply