--- --:--:-- --

ராமேஸ்வரம் கோயில் மூலவரை படம் பிடித்தது யார்..? சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படத்தால் சர்ச்சை!!

IMG_20200106_121033

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வடக்கே காசி விஸ்வநாதர் ஆலயத்தை எந்தளவுக்கு இந்துக்கள் புண்ணிய ஸ்தலமாக கருதுகிறார்களோ, அதற்கு இணையாக தெற்கில் புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் கோவிலாகும் .கோயில் கருவறையில் உள்ள மூலவர் ராமநாத சுவாமியின் பெயரால் சிவலிங்கம் உள்ளது.

 

ராமாயண காலத்தில், மணலால் சீதை உருவாக்கிய இந்த சிவன் சிலையை ராமன் வணங்கி வந்ததாக கூறப்படுவதுண்டு. இந்தச் சிலை தான் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் கருவறையில் அமைந்துள்ளது.

 

இலங்கை மன்னன் பராக்கிரம பாகு வினால் பல நூற்றாண்டுகளுக்கு முன் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் கருவறை அமைக்கப்பட்டு, ராமன் வணங்கிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுவதுண்டு.

 

சீதையால் உருவாக்கம் பெற்று ராமனால் வணங்கப்பட்ட இந்த சிவலிங்கம் அமைந்துள்ள கருவறைக்குள் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் தீட்சை பெற்ற குருக்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும்.

 

மேலும் கருவறைக்குள் நுழைய நேபாள மன்னர் மற்றும் சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆகிய 2 பேருக்கு மட்டுமே அனுமதி . வேறு யாரும் நுழைய வே கூடாது என்பதுடன் இந்த கருவறைக்குள் உள்ள மூலவர் சிவலிங்கத்தை படம் எடுக்கக் கூடாது என ஆகம விதிகள் உள்ளன.

 

இந்நிலையில் தற்போது இந்த கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைர லாகி, பக்தர்கள் பலரை பதறச் செய்துள்ளது. ஆகம விதிகளை மீறி புகைப்படம் எடுத்தது யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

 

வெளியாட்கள் யாரும் நுழைய முடியாத கருவறைக்குள் படம் பிடித்தது யார்?. பூஜை செய்யும் குருக்களில் யாரேனும் அல்லது பணியாளர்களில் எவரேனும் பணத்திற்கு ஆசைப்பட்டு படம் பிடித்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகம விதிகளுக்கு எதிரான இச்செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon