--- --:--:-- --

தங்கம் விலை உயர்வா – குறைவா?

3

கஸ்ட் மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் மாத கடையில் தொடர்ச்சியாக சரிவை கண்டது. அந்த வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.14,370க்கும் சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,960க்கு விற்பனை செய்யப்பட்டது.

 

 

தொடர்ந்து மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,385க்கும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,155க்கும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.97,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளி விலை மட்டும் இன்று குறைந்துள்ளது. அதன் படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon