90% அங்கன்வாடிகள் வாடகைக் கட்டடத்தில் தவெக எம்எல்ஏ சிந்து வைத்த கோரிக்கை
குடியாத்தம் பகுதியில் சுமார் 90 சதவீத அங்கன்வாடி மையங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருவதாகவும், அங்குள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என்றும் தவெக எம்எல்ஏ சிந்து சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளிப்பதற்காக எழுந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, முதலில் வேறு ஒரு தரவு தொடர்பான தகவலை வாசிக்கத் தொடங்கினார். பின்னர் கேட்கப்பட்ட கேள்வியை உணர்ந்த அவர், அதற்கு பதிலளிக்க சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர், எம்எல்ஏவின் கோரிக்கையை குறிப்பெடுத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





