--- --:--:-- --

மேட்டூர் அணை திறப்பு – சேலம் மேச்சேரியில் திறந்த வேனில் விஜய் சாலை வலம்!

4

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று (செப். 1) தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று முதல் 45 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர் ஜோசப் விஜய், மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார்.இதற்காக தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

 

 

சென்னையில் இருந்து விமானம் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள், கட்சியினர் பலரும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணை திறக்கும் விழாவுக்கு காரில் வருகிறார் முதல்வர். வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

 

 

இந்த நிலையில், சேலம் மேச்சேரி அருகில் வந்த முதல்வர் விஜய் அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி சாலை வலம் மேற்கொண்டார். கூடியிருக்கும் மக்களைப் பார்த்து கையசைத்தார். மக்களும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon