தனியார் பள்ளிகளுக்கு இணையாக அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி – சௌமியா அன்புமணி கோரிக்கை
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அங்கன்வாடி மையங்களிலும் எல். கே. ஜி, யூ. கே. ஜி வகுப்புகளை நடத்த அரசு முன்வருமா என பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். குழந்தைகளுக்கு தரமான ஆரம்பக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





