--- --:--:-- --

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு..!

02

ன்று மாதத்தின் முதல் நாள் (செப். 1) என்பதால், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.

 

 

இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

இருப்பினும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்திற்கும் மேல் இறக்குமதியே செய்யப்படுகிறது. உலகளாவிய அரசியல் பதற்றம் அல்லது உற்பத்திக் குறைப்பால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியாவிலும் எரிபொருள் விலை உயரும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon