இலங்கை பிரதமர் பதவியை ரனில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அனுப்பியிருக்கிறார். இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலை தொடர்ந்து அரசியல் மாற்றங்கள் நிகழ தொடங்கியிருக்கின்றன.
பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கை ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்த நிலையில் பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபராக தேர்வானார். கடந்த திங்களன்று புதிய அதிபர் பதவி ஏற்ற நிலையில் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்திருக்கிறார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதனையடுத்து இடைக்காலமாக புதிய அரசு விரைவில் பதவியேற்க உள்ளதாகவும் தினேஷ் குணவர்தன இடைக்கால பிரதமராக பதவியேற்பார் எனவும் தெரிகிறது.
இதனிடையே இலங்கையில் மொத்தம் உள்ள 9 மாகாணங்களின் ஆளுநர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். அதிபர் செயலகம் கேட்டுக்கொண்டதன் பேரில் பதவி விலகியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழலை வைத்துப் பார்க்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.