தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக புவியரசன் தெரிவித்துள்ளார்.

 

தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், அவர் கூறினார்.

 

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 சென்டி மீட்டர் மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் ஏழு செண்டி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக புவியரசன் தெரிவித்தார்.

 

அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் முப்பத்து சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்க வேண்டிய நிலையில் 9 விழுக்காடு குறைந்து 28 சென்டி மீட்டர் மட்டுமே பதிவாகியுள்ளது என குறிப்பிட்டார்.


Leave a Reply