தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!
தாராபுரம் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பங்கேற்க உள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2001-ல் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்த செம்மலை அதிமுகவில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அவர் விலகிய நிலையில் இன்று தவெகவில் இணைய உள்ளார்.
துராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வருகிற 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், கடந்த வெள்ளிக்கிழமை பரப்புரை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரம் தொகுதியில் இன்று 3 மணியளவில் முதலமைச்சர் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக, தாராபுரம் உடுமலை சாலையில் சித்ராவுத்தன்பாளையம் கிராமம் அருகேயுள்ள மாருதி நகரில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




