தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ‘இந்தியா’ கூட்டணி மிகவும் ஒற்றுமையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், வாக்குத் திருட்டு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) மோசடி உள்ளிட்ட பல தேர்தல் முறைகேடுகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், வாக்குகளைத் திருடியே மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




