--- --:--:-- --

தவெக அமைச்சரவையில் இணைகிறதா பாமக?

1

தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் பாமக இணைகிறதா என்ற கேள்விக்கு எம்எல்ஏ சௌமியா அன்புமணி பதில் அளித்துள்ளார்.தவெக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் பாமக இடம்பெறும் என்றும் கூறப்பட்டு வந்தது.

 

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. பாமகவின் இந்த முடிவு தவெகவின் அமைச்சரவையில் இடம்பெற உள்ளது என்பதாலே என கூறப்பட்டு வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சௌமியா அன்புமணி பதில் அளித்துள்ளார்.

 

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் பசுமைக்தாயகம் அமைப்பின் தலைவரும், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான செளமியா அன்புமணி இன்று சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுமியா அன்புமணி, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சிஙகப்பெண் நடைப்பயணம் வெற்றி பெற்ற நிலையில் நன்றி தெரிவிப்பதற்கு ஆஞ்சநேயர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும் எஸ்.ஐ.ஆர் தொர்பான கேள்விக்கு பதில் அளித்த சௌமிய அன்புமணி, SIR பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் உள்ளது அதன்பிறகு தான் விளக்கமாக சொல்லமுடியும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாடு அமைச்சரவையில் பாமக இடம்பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செளமியா அன்புமணி அது வதந்தி என்றும் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று தெரிவித்தார்.

 

 

மேலும் பாமக பூரண மதுவிலக்கு பேரணியில் கள் நிலைப்பாடு என்ன என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த செளமியா அன்புமணி, பாமக பூரண மதுவிலக்கு கொள்கையில் கள் தொடர்பாக என்ன இடம் பெற்று உள்ளதோ அதே நிலைப்பாடுதான் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon