ரகுபதி வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருமயம் தொகுதியில் 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியின் வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் சிந்தாமணி தொடர்ந்த தேர்தல் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிந்தாமணி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ரகுபதி தாக்கல் செய்த மனுவை விசாரித்தே நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் திருமயம் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்குச் சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




