மூதாட்டியிடம் கவரிங் செயினை பறித்து சென்ற மர்ம நபர்

மூதாட்டியை தாக்கி விட்டு தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகரை சேர்ந்த சாந்தா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாந்தாவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தார். திடீரென சாந்தாவை தாக்கி கீழே தள்ளிய அந்த நபர் அவர் அணிந்திருந்த கவரிங் செயினை தங்க செயின் என எண்ணி பறித்துச் சென்றார்.

 

இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மூதாட்டியை தாக்கி விட்டு மர்மநபர் செயினை பறித்து விட்டு தப்பிய சம்பவம் மதுரை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply