--- --:--:-- --

தவெக அரசை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்!

images - 2026-09-24T120009.015

தவெக அரசு ஆட்சி அமைத்து நான்கு மாதங்களிலேயே மக்கள் பிரச்னைகளை கையாள்வதில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவெக அரசு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

 

 

தவெக அரசின் அனுபவமின்மை மற்றும் அணுகுமுறை காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் அரசு தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும், ஆட்சி அமைந்து நான்கு மாதங்களிலேயே தவெக அரசு மக்களிடையே அதிகளவிலான வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளதாகவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon