சேலத்தில் பணியின்போது உயரழுத்த மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

சேலம் ரயில் நிலையத்தில் மேற்கூரையை சீரமைக்கும் போது தொழிலாளி ஒருவர் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி கீழே விழும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 

சேலம் ரயில் நிலையத்தில் உள்ள நடைபாதைகளில் பழைய மேற்கூரையை மாற்றி இரும்பு மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி மேற்கூரையை மாற்றி அமைக்கும் பணியில் 8 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

 

இதில் மணி என்பவர் உயர் அழுத்த மின்கம்பி அருகே சென்றதால் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. இந்த நிலையில் பலத்த தீக்காயமடைந்த மணி மேற்கூரையிலிருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

ரயில் நிலையத்தில் உயிருக்கு போராடிய மணிக்கு உடனடியாக யாருமே உதவ முன் வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


Leave a Reply