விழுப்புரம், தஞ்சை கலெக்டர் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

தமிழகத்தில், தஞ்சாவூர், விழுப்புரம் கலெக்டர் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி, மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராக இதுவரை இருந்து வந்த பழனிசாமியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை இணை ஆணையர் கோவிந்த்ராவ் தஞ்சாவூர் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் ஆட்சியராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அவருக்கு பதிலாக, விழுப்புரம் ஆட்சியராக இருந்து வரும் சுப்ரமணியன், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, விழுப்புரம் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

 

குடிமை பொருள் வழங்கல்துறை ஆணையர் கண்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை மாநில தேர்தல் ஆணைய செயலராக இருந்த எஸ்.பழனிசாமி டவுன் பஞ்சாயத்து இயக்குனராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மேலும் கலை, கலாசாரத்துறை ஆணையராக இருந்த சிஜி தாமஸ் பள்ளிக்கல்வித்துறை ஆணையராகவும், மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராகவும், வேளாண்துறை செயலாளர் முனியநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Leave a Reply