செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்க! :பெற்றோர்களுக்கு பள்ளி கல்வித்துறை வேண்டுகோள்

நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ய பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

 

குழந்தைகள் தினத்தன்று அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை தங்குதடையின்றி மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

நவம்பர் 14 இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை அனைத்து பெற்றோர்களும் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து எந்த வித தொந்தரவுமின்றி நேரத்தை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.


Leave a Reply