திருப்பூர் அடுத்துள்ள அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகள் அனைவருக்கும் தினமும் காலை வழிபாட்டுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை நடந்த வழிபாட்டு கூட்டத்தில் முதன்முறையாக யோகாவின் ஒரு அங்கமாக இருக்கும் கிளாப்பிங் தெரபி எனப்படும் கைதட்டிக்கொண்டே பாடும் பயிற்சி நடந்தது. பாட்டு ஆசிரியை பத்மபிரியா தலைமையில் மாணவிகள் அனைவரும் கைதட்டிக்கொண்டே திருக்குறளை பாடினார்கள்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை ( பொறுப்பு ) திலகவதி கூறியதாவது : கைதட்டி பாடும் பயிற்சியினால் மாணவிகளின் நினைவு திறன் அதிகரிப்பதுடன், மாணவிகள் பாடங்களை உற்சாகமாவும் படிக்க முடியும் என்றும், வரும் நாட்களில் சினிமா பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் இக்கூட்டத்தில் கைதட்டி பாடப்பட உள்ளது, என்றார். தொடர்ந்து கூட்டத்தில் அரசு பள்ளிக்கென லோகோ வரைந்து வந்த 6 ம் வகுப்பு மாணவிகள் சக்தி, வைஷ்ணவி மற்றும் கணீர் குரலால் போக்குவரத்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்ற 6 ம் வகுப்பு மாணவி கமலி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.