பள்ளி மைதானத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை!

திருவாடானை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. அகற்ற கோரிக்கை. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இந்த மேல்நிலைப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் திருவாடானையை சுற்றி உள்ள கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளிக்கு எதிர்புறம் விளையாட்டு மைதானம் உள்ளது.

இந்த மைதானத்தில் சுற்றில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. மேலும பள்ளியில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வழியிலும் சீமை கருவேல மரங்கள் இருபுறமும் அடர்ந்து விளையாட்டு மைதானத்திற்கு செல்வதிலும் சிக்கல் உள்ளது. எனவே இந்த அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அடர்ந்திருக்கும் புதர்களை அகற்றி மாணவர்கள் விளையாட நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள்.


Leave a Reply