இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் கல்லூர் ஊராட்சிக்குட்பட்ட திருவிடைமிதியூர் (பாப்பாங்கோட்டை) கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி போதிய பராமரிப்பு இன்றி முட்புதர்கள் மண்டி கிடக்கிறது.மேலும் பல மாதங்கள் குடிநீர் வினியோகம் இல்லை என்று கூறப்படுகிறது இது குறித்து இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மகளிர்கள் பல முறை ஊராட்சி செயலாளரிடம் புகார் அளித்தும் பயனில்லை என்று சொல்கின்றனர்.
ஆனால் இதுவரையிலும் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தினை நேரில் வந்து ஆய்வு செய்தது இல்லை என்று கூறுகின்றனர்.இதனால் இந்த குடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சி பொருளாய் இருப்பது மன வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து சீரமைத்து பொது மக்களின் நலன் கருதி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.