5 மணி நேரத்தில் 3 அடிக்கு மட்டுமே குழி தோண்டிய ரிக் இயந்திரம்

நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்தில் குழந்தையை மீட்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தையை எவ்வாறு பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட நான்கு ஐந்து மணி நேரமாக 3 அடி ஆழம் மட்டுமே துளையிட முடிந்தது. அந்த நிலையில்தான் தற்போது இயந்திரத்தின் இரண்டாவது பணி தொடங்கியது.

 

இப்போது அந்த எந்திரத்தின் பணி முழுவீச்சில் தொடங்கியுள்ளது. மிகவேகமாக துளையிடும் பணியை அந்த வீரர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். அந்த இயந்திரம் முழுவதுமாக தனது செயல்பாட்டிற்கு வரும் நிலையில் ஒரு மணிநேரத்தில் குறைந்தது 10 அடி ஆழம் என்பதை அவர்களால் எட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

40 அடி ஆழத்துக்கு கீழே உள்ள பாறைகள் கொஞ்சம் இலகுவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அதனை எடுத்து அந்தப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இதயத்தின் செயல்பாடு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாவட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அங்கு உள்ளனர்.

 

எனவே தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து குழந்தையை பாதுகாக்க போராடி வருகின்றனர். 25 அடியில் சிக்கி இருக்கும் குழந்தையை கேமராவில் மூலம் மீட்புக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.


Leave a Reply