புயல் காரணமாக மகாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் தவிப்பு

புயல் காரணமாக மகாராஷ்டிரா மாநில துறைமுகம் ஒன்றில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் உண்ண உணவின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

குமரி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதற்கிடையே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களில் சிலர் மகாராஷ்டிரா மாநில துறைமுகங்களிலும் கரையொதுங்கியுள்ளனர். மேலும் கடலில் சிக்கித் தவித்த மீனவர்களில் சிலரை சக மீனவர்கள் மீட்டனர். இதேபோல மகாராஷ்டிராவில் தமிழக மீனவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் கரை ஒதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அவ்வாறு கரை ஒதுங்கிய மீனவர்கள் உண்ண உணவின்றி தவித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எனவே தங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply