நடிகர் விஜய்க்கு திரையரங்கில் மெழுகு சிலை வைக்க அனுமதி கோரி மனு : விசாரணை ஒத்திவைப்பு

விதமாகபிகில் திரைப்படத்தை கொண்டாடும் விதமாக திரையரங்கில் மெழுகு சிலை அமைக்க அனுமதி கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படத்தை கொண்டாடும் விதமாக சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ லட்சுமி திரையரங்கில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை வைக்கவும் மேளதாளங்கள் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபடவும் அனுமதி வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

அக்டோபர் 24 முதல் 27 ஆம் தேதி வரை கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கேட்டுக்கொண்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஸ்ரீ லக்ஷ்மி திரையரங்கு உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்கக் கூறி | வழக்கு விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Leave a Reply