தீபாவளியை முன்னிட்டு நவ., 25ம் தேதி முதல்‌ கோவை கொடீசியா நுழைவு வாயில்‌ அருகில்‌ தற்காலிக பேருந்து நிலையம்‌

கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும்‌ போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்‌ பொருட்டு கோவையிலிருந்து சேலம்‌ மார்க்கமாக செல்லும்‌ பேருந்துகளை கொடீசியா நுழைவு வாயில்‌ அருகே தற்காலிக பேருந்து நிலையம்‌ அமைக்கப்பட்டு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

கோவையில்‌ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான பயணிகள்‌ மற்றும்‌ வாகனங்கள்‌ வந்து செல்வதால்‌ கோவை காந்திபுரம்‌ டாக்டர்‌ நஞ்சப்பா சாலை, மத்தியப்‌ பேருந்து நிலையம்‌, நகரப்‌ பேருந்து நிலையம்‌ மற்றும்‌ அவினாசி சாலை ஆகிய இடங்களில்‌ மிகுந்த போக்குவரத்து நெரிசல்‌ ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும்‌ வண்ணம்‌ இம்முறை காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம்‌, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள்‌ இணைந்து கொடீசியா நுழைவு வாயில்‌ அருகில்‌ தற்காலிக பேருந்து நிலையம்‌ அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து, 25.10.2019 காலை 06.00 மணி முதல்‌ 27.10.2019 முடிய, கூட்டம்‌ முடியும்‌ வரை சேலம்‌ மார்க்கமாக செல்லும்‌ அனைத்து பேருந்துகளும்‌ கொடீசியா நுழைவு வாயில்‌ அருகில்‌ அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. ஏனைய பேருந்துகளான திருப்பூர்‌ வழி பல்லடம்‌, அவினாசி, ஈரோடு, நாமக்கல்‌, அந்தியூர்‌, கோபி ஆகிய பேருந்துகள்‌ காந்திபுரம்‌ மத்திய பேருந்து நிலையத்தில்‌ இருந்து வழக்கம்‌ போல்‌ இயக்கப்படும்‌.

 

மேலும்‌, மேற்காண்‌ தற்காலிக பேருந்து நிலையத்தில்‌ பயணிகள்‌ நலன்‌ கருதி குடிநீர்‌ வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதி, நிழற்குடை வசதி ஆகியவை மாநகராட்சி நிர்வாகம்‌ சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply