மகனை சினிமாவில் நடிக்க வைக்க பண மோசடி செய்தவர் கைது

தனது மகனை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக பலரையும் ஏமாற்றி பணத்தை கடனாக வாங்கி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நண்பனை நம்பி தனது கல்லூரி கட்டணத்தை கடனாக கொடுத்ததால், கல்வியை இழந்து கூலி வேலை செய்து வருகிறார் கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலத்தை சேர்ந்த மூர்த்தி . இவர் எதிர்கால கனவுகளை சுமந்தபடி கடந்த 2017-ல் சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் தங்கி பல்லாவரம் தனியார் கல்லூரியில் படித்த மூர்த்தி,பகுதிநேர வேலையும் செய்து வந்தார். அப்போதுதான் திருவல்லிக்கேணியை சேர்ந்த திமுக பிரமுகர் கண்ணனின் இரு மகன்கள் மூர்த்தியிடம் பணம் இருப்பதை அறிந்து அவரிடம் கடன் கேட்டுள்ளனர். ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்து விடுவோம் என அவர்கள் கூறியதால் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய சுமார் 1 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் மூர்த்தி .

மூர்த்தி
மூர்த்தி

ஆனால் பல வாரங்களை கடந்து, மாதங்கள் கடந்து வருடங்கள் கடந்து விட்டன. மூர்த்தியின் பணம் திரும்பி வரவில்லை.

 

இதனால் கல்லூரி கட்டணம் செலுத்த முuயாமல் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சொந்த ஊருக்கே சென்று மூர்த்தி கூலி வேலை செய்து வருகிறார்.

கடன் கொடுத்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் கடன் தொகையை வசூலிக்க வந்த மூர்த்தியை திமுக பிரமுகர் கண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மூர்த்தி புகார் அளிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.அப்போது தனது மகனை வைத்து சினிமா படம் எடுப்பதற்காக கண்ணன் பலரிடம் கடன் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து கண்ணன் மற்றும் அவரது ஒரு மகனை கைது செய்த காவல்துறையினர் மற்றொரு மகனை தேடி வருகின்றனர்.


Leave a Reply