ஃபேஸ்புக் மூலம் பழகி இளைஞரை கடத்திய கும்பல்!

மதுரையில் 20 லட்சம் ரூபாய் கேட்டு பேஸ்புக் நண்பர்களால் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரரின் மகன் பார்த்திபன் எம்பிஏ பட்டதாரியான இவர் கடந்த சனிக்கிழமை ஃபேஸ்புக் நண்பர்கள் கடத்தப்பட்டார்.

 

தொலைபேசியில் அழைத்த மர்மநபர்கள் அவரை விடுவிக்க 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து ராஜிவ் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர் வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி அதிகாரிகள் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர்.

 

மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பார்த்திபனை சக நண்பர்கள் கயத்தாறு பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனுடைய பார்த்திபனை கடத்தல்காரர்கள் கயத்தாறு பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு மாயமாகினர். கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 10 ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் மீதமுள்ள நபர்களை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Leave a Reply