ஹைதராபாத்தில் தனியார் குழந்தை நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள ஐசியு பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது மளமளவென தீ பரவியதால் ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்டிருந்த 5மாத குழந்தை என் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் ஆறு குழந்தைகள் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு ஏற்பட்டதே தீ விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பலமுறை மின்கசிவு ஏற்பட்டு உரிய பராமரிப்பின்றி என் விபத்திற்கு காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.