சாலையோர மணல் திட்டுகளை அகற்றிய காவல் உதவி ஆய்வாளர்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த சாலையோர மணல் திட்டுகளை காவல் உதவி ஆய்வாளர் தாமாக முன்வந்து அகற்றியது பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. ராணிப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன். இவர் ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணி சாலையை தூய்மைப்படுத்தும் பணி போன்றவற்றை பல்வேறு பணிகளை தனி ஒருவராக நின்று செல்வதால் பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்று வந்தார்.

 

இந்த நிலையில் ஆற்காடு ராணிப்பேட்டை இணைக்கக் கூடிய மேம்பாலத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் விபத்து உள்ளதாக புகார்கள் எழுந்தது. அங்கு ஆய்வு செய்தபோது செடிகள் போன்றவற்றால் விபத்து ஏற்படுவது தெரியவந்தது இது தாமாகவே முன்வந்து அந்த மணல் திட்டு களையும் செடிகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டால் இதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Leave a Reply