7பேர் விடுதலை தொடர்பாக பிரதமர் மோடிக்கு ரவிச்சந்திரன் கடிதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு மதுரை மத்திய சிறையில் தண்டனை பெற்றுவரும் ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் மூலமாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்தாண்டு 7 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசின் முடிவை மத்திய அரசு நிராகரித்தது சுட்டிக்காட்டியுள்ளார்.
காலிஸ்தான் தீவிரவாதிகளை விடுவிக்க மத்திய அரசு முடிவெடுத்தது போல 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் பஞ்சாப் தமிழக மாநிலங்களில் அரசியல் கைதிகளை விடுவிப்பது இரட்டை நிலைப்பாடு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 28 ஆண்டுகளாக 7 பேரும் சிறையில் வாடுவதாக தெரிவித்துள்ள ரவிச்சந்திரன் பிரதமர் நேரடியாக தலையிட்டு 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் சம்மதம் தெரிவிக்க ஆளுநரை வலியுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




