கையெழுத்து சரியாக இல்லையென கூறி 2ஆம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியர்

விழுப்புரம் அருகே காப்பீட்டு படத்தில் கையெழுத்து சரியாக இல்லை எனக்கூறி இரண்டாம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சின்னசேலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் லக்ஷ்மி தம்பதியினரின் மகள் சுபஸ்ரீ கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

ஆசிரியர் சரவணன் வீட்டு பாடத்தில் கையெழுத்து சரியாக இல்லை எனக் கூறி மாணவியை பிறந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவியின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மாணவியை சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா ஆசிரியர் சரவணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply