நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நாமக்கல் பயிற்சி மையத்திற்கு தொடர்பா?

நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் நாமக்கல் தனியார் பயிற்சி வைத்திருக்கும் தொடர்பு இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மாணவர்களுக்கு சூர்யா ராகுல் பிரியங்கா மற்றும் அவரது பெற்றோர்கள் என 10 பேர் சிறையில் உள்ளனர். இதனிடையே நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையம் மற்றும் பள்ளியில் வருமான வரித்துறையினர் 72 மணி நேரம் சோதனை நடத்தினர்.

 

கரூர் சென்னை சென்னிமலையில் உள்ள பயிற்சி நிறுவனங்கள் வீடுகள் என 17 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் 30 கோடி ரூபாய் பணமும் 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்களில் 4 பேர் சோதனை நடைபெற்ற நீட் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் என்று சிபிசிஐடி அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நீட் தேர்வு தொடர்பாக தனியார் பயிற்சி மைய நிறுவனர் ஐயும் விசாரிக்க திட்டமிட்டு இருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply