ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் பேரம் பேசியதால் காப்பீடு திட்டத்திலிருந்து மருத்துவமனை நீக்கம்!
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனை முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஈசிஆர் ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றை நிகழும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் நிர்வாகம் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.
இந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது பேரம் பேசப்பட்டது உண்மைதான் என நிரூபிக்கப்பட்டு இருப்பதாக காப்பீடு திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். இதை எடுத்து கிலோபல் மருத்துவமனையை தமிழக அரசு முதல்வர் காப்பீடு திட்டத்தில் இருந்து நீக்கம் செய்துள்ளது. மேலும் இந்த புகாரில் சம்பந்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தற்காலிக ஓட்டுனர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




