சொத்துக்காக தம்பி மற்றும் தம்பியின் மனைவி கொலை

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பி மற்றும் அவரது மனைவியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தகராறில் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கரூர் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தம் காரணமாக மதுரைக்கு இடம்பெயர்ந்து உள்ளார் கரூரில் வசதி வாய்ப்பு என்று இருந்த அவர் மதுரை சென்றதும் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி அதன் மூலம் வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுப்பதற்காக வெள்ளகோவில் உள்ள தமது சகோதரி கண்ணம்மா வீட்டுக்கு மனைவியுடன் காரில் சென்றுள்ளார். ஏற்கனவே சில மனக்கசப்புகள் இருந்தாலும் அவற்றை மறந்து திருமணத்தின் மூலம் இரு குடும்பங்களையும் இணைத்து விடலாம் இது நம்பிக்கையில் சென்றுள்ளார் செல்வராஜ். இந்த சமயத்தில் அழைப்பிதழ் கொடுக்க சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர்கள் சென்ற கார் கரூர் மதுரை புறவழிச்சாலையில் சுக்காலியூர் அருகே நின்றது கண்டுபிடிக்கப்பட்டது.

 

உடனே விசாரணையில் இறங்கிய போலீசார் செல்வராஜின் சகோதரி கணவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதற்காக கண்ணம்மாவை செல்வராஜ் தம்பதியை கொலை செய்து வீட்டின் அருகிலேயே குறைந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜ் மற்றும் அவரது மனைவியின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கண்ணம்மா விற்கும் செல்வராஜ் ஆகும் பூர்வீக சொத்து விற்பனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது அதனால் செல்வராஜ் தம்பதி கொலை செய்யப்பட்டது. விசாரணையில் தெரியவந்துள்ளது இதுதொடர்பாக அவரது மகனையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Leave a Reply